கப்பல் மேலாண்மைச் செயற்பாட்டு அலகு [விஎம்சி]நாட்டின் கடலோர மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்தும் செயல்களுக்கு எப்போதும் இந்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன்மூலம், தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் / மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நான்கு ஆய்வுக் கப்பல்களை சொந்தமாக வைத்திருப்பதால், நாடு மற்றும் அதன் குடிமக்களின் நலனுக்காக பல பரிமாணங்களில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு திறன்களை மேம்படுத்துகிறது.

கப்பல் மேலாண்மைச் செயற்பாட்டு அலகு என்பது தே.பெ.தொ.கழகத்தின் செயல்பாட்டுப் பிரிவாகும், இது தே.பெ.தொ கடற்சார் ஆராய்ச்சி கப்பற் தொகுதியின் தொழில்நுட்ப மேலாண்மைக்கு பொறுப்பானது. அக்கப்பற் தொகுதியில் கடற்சார் ஆய்வுக் கப்பல் சாகர் நிதி, கடற்சார் ஆய்வுக் கப்பல் சாகர் மஞ்சுஷா, கடற்சார் ஆய்வுக் கப்பல் சாகர் தாரா மற்றும் கடலோர ஆராய்ச்சி கப்பல் சாகர் அன்வேஷிகா போன்ற ஆய்வுக் கப்பல்கள் உள்ளன.

கப்பல் மேலாண்மைச் செயற்பாட்டு அலகு-தே.பெ.தொ.கழகத்தின் கீழுள்ள ஆராய்ச்சி கப்பல்கள் கடலிலுக்குச் செல்லும் எந்தவொரு ஆய்வுப்பயணத்திலும் மிக முக்கியமான அம்சமாகும். அக்கப்பல்களில் மேம்பட்ட வழிசெலுத்தல் கருவிகள், நவீன உபகரணங்கள் மற்றும் இயந்திரக் கையாளுதல் அமைப்பு ஆகியவற்றைக் கொண்ட பல்துறைக் கடல் கண்காணிப்புத் தளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அறிவியல் / கடலியல் வல்லுநர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக அதாவது தொழில்நுட்பச் செயல் விளக்கம், கடல்சார் ஆய்வு, மாதிரி சேகரித்தல், அவதானிப்புகள் கடற் சூழலை ஆராய உதவுகிறது. தொழில்நுட்ப நோக்கங்கள், புத்தாய்வு போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக கடல் சூழலை ஆராய்வது முதலியை நடைபெறும். கடல்சார் அவதானிப்புகளின் முதன்மை ஆதாரமான இந்த ஆராய்ச்சி கப்பல்களைப் பயன்படுத்தி கடலில் உள்ள பல்துறை அணுகுமுறை மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் சோதிக்கப்பட்டுச் சரிபார்க்கப்படுகின்றன.

கப்பல் மேலாண்மைச் செயற்பாட்டு அலகு தொடங்கியதிலிருந்து:

இவ்வலகு 1996-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, கடலோரத் தூய்மைக்கேடு, கடலோர மாசுபாடுக் கண்காணிப்பு, கடலோர ஆய்வுகள் மற்றும் கரையோர பல்துறை வேலைகளைச் செவ்வனே செய்யும்பொருட்டு இரு கடலோர ஆராய்ச்சிக் கப்பல்கள் சாகர் பூர்வி மற்றும் சாகர் பச்சிமி ஆகியவை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் கையகப்படுத்தப்பட்டன. 1996-ஆம் ஆண்டு முதல் அறிவியற் சமூகத்திற்கும் தேசத்திற்கும் மகத்தான சேவையை ஆற்றியப் பின்னர் இரண்டு கப்பல்களும் தற்போது சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

2001-ஆம் ஆண்டில், கப்பல் மேலாண்மைச் செயற்பாட்டு அலகு சாகர் சக்தி என்ற பெருஞ்சுமைப்படகை நிர்வகிக்கப் பொறுப்பேற்றது, இப்படகில் பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1 மெகாவாட் மின்சார முன்னோடி நிலையத்தைச் செயல்படுத்தி நிரூபிக்கப்பட்டது உலகின் முதல் வெற்றிகரமான முயற்சியாகும்.

2006-ஆம் ஆண்டில், சாகர் மஞ்சுஷா என்ற ஒரு சிறப்பு கடலாய்வுக் கப்பல் கையகப்படுத்தப்பட்டது, இது ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் மூலம் தரவு மிதவைகள் மிதக்கவிடவும் பல்வேறு அறிவியல் நடவடிக்கைகளுக்காகவும் கட்டப்பட்டது. இக்கப்பலில் பதினோரு அறிவியலறிஞர்கள், எட்டு அதிகாரிகள் மற்றும் பத்துக் குழுவினர் பணியாற்றினர். இதில் இரண்டு வில் உந்திகள், சிறப்பு கப்பற்தள பாரந்தூக்கிகள், அறிவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆழ்கடல் மின்னிழுவையுடன் ஏ-சட்டகம் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன.

பின்னர் 2008-ஆம் ஆண்டில், உலகத்தரம் வாய்ந்த சாகர் நிதி ஆய்வுக் கப்பல் தே.பெ.தொ.க., கப்பல் அணியில் இணைந்தது. இந்தியாவில் சாகர் நிதி போன்ற ஆய்வுக் கப்பல் ஒன்று மட்டுமே, இது இத்தாலியிலுள்ள ஃபின்கண்டியரி நிறுவனத்தாரால் கட்டப்பட்டது. இந்தியாவின் பெருமை சாகர் நிதி ஆய்வுக்கப்பல், துணைக் கண்டத்தின் அதிநவீன பனி வகுப்பு பல்இயல் அணுகுமுறைக் கப்பலாகும். திசைக்கோண மற்றும் வில் உந்திகளுடன் டீசல்-மின்சாரத்தில் முழுமையான தானியங்கி அமைப்புடன் இயங்கும் தன்மை கொண்டது. இயக்க நிலையமைவு வகுப்பு II அமைப்பு, இக்கப்பலின் ஆழ்கடல் இழுவை எந்திரம் 6000 மீ ஆழத்திலிருந்து 60 டன் எடையை மிக மேம்பட்ட செயல்பாட்டு வெற்றியுடன் தூக்கும் திறன் கொண்டது. இந்த கப்பல் பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப செயல்விளக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அவை முறையே, ஆழ்கடல் சுரங்கம், தொலை இயக்கு நீர்மூழ்கிக் கப்பல், தானியங்கி நீர்மூழ்கி, எரிவாயு உறேடுகளைக் கண்டறிதல், கடல்சார்வியல், வானிலை, புவியியல் ஆராய்ச்சி போன்றவையாகும். இக்கப்பல்கள் 45 நாட்கள் வரை ஆழ்கடல் பயணங்களுக்காக அதாவது 10000 கடல் மைல்கள் வரை செல்லும்படி நீல நீர் திறன்-என்ற கட்டமைப்பின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. 11 புயல்கள் மற்றும் 73 நானோ மீ/ மணி [135 கிமீ/மணி] காற்றின் வேகத்தை எதிர்கொண்டு, 66°S அட்சரேகையை அடைந்த முதல் இந்தியக் நாட்டியின் கொடி ஆராய்ச்சி கப்பல் சாகர் நிதி ஆகும், அண்டார்டிகாவின் கடுமையான காலநிலை மற்றும் அற்புதமான காட்சிகளைக் கண்ட ஆய்வுக்கப்பல் இதுவாகும்.

'இந்தியாவில் உற்பத்தி செய்' என்ற கொள்கையை ஊக்குவிக்க இந்திய அரசின் முயற்சியின் கீழ், இந்தியக் கடலோர நீரில் நமது அறிவியலாளர் சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் மாதிரித் திறன்களை மேம்படுத்தவும் அறிவியல் சகோதரத்துவத்தின் எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சாகர் தாரா மற்றும் சாகர் அன்வேஷிகா என்ற ஆய்வுக்கப்பல்கள் முறையே ஆகஸ்ட், 2019 மற்றும் பிப்ரவரி, 2020 ஆகிய ஆண்டுகளில் தே.பெ.தொ.க., கப்பல் அணியில் இணைந்தன.

இவ்விரண்டுக் கப்பல்களும் மேம்பட்ட அறிவியல் உபகரணங்கள் மற்றும் அதிநவீன வழிசெலுத்தல் உபகரணங்களுடன் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் கடல்சார் மற்றும் வளிமண்டலத் தரவுகளை அளவிடுவதற்கான தம் பணியை ஆற்றி வருகின்றன.

சாகர் தாரா மற்றும் சாகர் அன்வேஷிகா ஆய்வுக்கப்பல்களின் அறிவியல் மற்றும் செயல்பாட்டு திறன்கள்:

  • சமீபத்திய வழிசெலுத்தல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய பயினகம்.
  • எந்திரக் கட்டுப்பாட்டு அறை &பிரத்யேக மின்னிழுவைக் கட்டுப்பாட்டு நிலையம்.
  • தங்குமிடம் &பொழுதுபோக்கு அறை.
  • நுட்பமான கையாளுதல் அமைப்புகள் முறையே., சிடிடி மின்னிழுவை [1டன்], கடல்சார் மின்னிழுவை [1டன்] &படகின் பின்பகுதி ஏ-சட்டகத்துடன் [5டன்]கூடிய பொதுப்பயன் மின்னிழுவை [3 டன்] துறைமுக பகுதி ஏ-சட்டகம் [2 டன்], ஜே- சட்டகம் [2 டன்].
  • அறிவியற் செயல்பாடுகளுக்குப் பெரிய கப்பற் பணித்தளம்.
  • கப்பலிலேயே களப் பகுப்பாய்வு, மாதிரிகள் மற்றும் தரவைப் பாதுகாப்பதற்காக அதிநவீன அறிவியல் உபகரணங்களுடன் கூடிய பிரத்யேக ஈர மற்றும் உலர் ஆய்வகங்கள். (ஆழமற்ற நீர் பல் ஒளிக்கதிர்க்கற்றை/ஒற்றை ஒளிக்கதிர்க்கற்றை எதிரொலி ஆழமானிகள், டாப்ளர் ஒலிவிளைவு கருவி, கடலடி கீழடுக்கப் பதிப்பி, கடத்துத்திறன், வெப்பநிலை மற்றும் ஆழத்தை அளக்கும் கருவி, உப்பின் தன்மை அளவிடும் கருவி, தானியங்கி பகுப்பாய்வி, கையடக்க ஊட்டச்சத்து பகுப்பாய்வி, மையவிலக்கி, கடல் நீரின் மேற்ப்பரப்பு வெப்பநிலை மற்றும் உப்பின் தன்மை அளவிடும் கருவி, உயர் அழுத்தக் கொப்பரை மற்றும் பிற உள் பகுப்பாய்வு உபகரணங்கள்)
  • அடித்தட்டைக்கல அமைப்பு உடைய இந்த கப்பல் ஒலியலையுணரிகலைப் பொருத்தப்பட்டுள்ளது இது உலர் கப்பற்துறை பயன்பாட்டை விட மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.
  • சிறந்த செலுத்துத்திறனுடன் கூடிய சுக்கான்.

இக்கப்பல்கள் ஆழமற்ற நீர் ஆய்வுகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன[கடல்நீர் தரக் கண்காணிப்பு, ஆழமற்ற நீர்ப்பரப்பினடியிலுள்ள பல்வேறு பொருட்கூறுகளைச் சோதித்தல், தொழில்நுட்ப செயல்விளக்கம், கடலில் இருந்து மருந்துகளைக் கண்டறிதல், பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் ஆழ்கடல் அளவியல், கப்பல்கள், கடலோர மண்டலங்களின் சுற்றுச்சூழல் போன்றவற்றை அட்டவணைப்படுத்தல் போன்றவற்றிற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை இந்தியாவிலுள்ள கடற்கரையோரங்களில் செயல்படுத்துகிறதுமட்டுமல்லாமல் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய நிலையத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பயண அட்டவணையின்படி ஆராய்ச்சிக் கப்பல்களை இயக்குவதற்காகக் கப்பலில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப/செயல்பாட்டு சிக்கல்களை கப்பல் மேலாண்மைச் செயற்பாட்டு அலகு இடைவிடாத முயற்சிகளாலும் வழக்கமான தொடர் நடவடிக்கைகள் மூலம் செயலாற்றி உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், அக்கப்பல்களில் ஏற்படும் பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு குறைந்த செலவில் புதுமையான பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கி செயல்படுத்த ஒரு தொடர்ச்சியான அணுகுமுறை இக்குழுவிற்கு உள்ளது. இந்த பொறியியல் தீர்வுகள் கப்பலின் நம்பகத்தன்மையை அதிகரித்து கப்பலிலுள்ள கருவிகள் ஒத்திசைவாக செயல்படும்படி மாற்றி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பச் செயல்திறனை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் கப்பல் செயலறு நேரத்தை குறைத்து செயல்பாட்டு நேரத்தை மேம்படுத்தியுள்ளன, இதனால் அறிவியல் சமூகம் அதிக அளவில் பயனடைகிறது.