பெருங்கடல் கட்டமைப்புகள்
உவர்நீக்கம், சுரங்கம், தரவு மிதவைகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக தே. பெ. தொ. க., பல கடல்சார் கூறுகளை உருவாக்கி வருகிறது. இதில் குழாய்த்தொடர்கள்/தூக்கிகள், சிறிய மிதவைகள் மற்றும் பெரிய கப்பல்களுக்கான ஆழமான நீரில் நிலைநங்கூர அமைப்பு ஆகியவை அடங்கும். தே. பெ. தொ. கழகத்தில் கையாளப்படும் பெரும்பாலான திட்டங்களுக்கு பல கடல்சார் கூறுகளை உருவாக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இக்குழு அத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
பெருங்கடல் கட்டமைப்புக் குழுவானது நிறுவன மற்றும் கடல்சார் நிறுவல்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ச்சியான ஆராய்ச்சி மூலம் புதுமையான வடிவமைப்புத் தீர்வுகளை வழங்குகிறது. குழுவால் கையாளப்படும் முக்கியத் திட்டங்கள் பின்வருமாறு:
அகத்தி / மினிகாய் தீவுகளிலுள்ள குறைவெப்ப வெப்பஞ்சார் உவர்நீக்க நிலையங்களின் காட்சிகளுடன் நிலையகட்டமைப்பு வரைபடம்
ஒன்றியப்பிரதேசமான இலட்சத்தீவுக்கூட்டத் தீவுகளில் குறைவெப்ப வெப்பஞ்சார் உவர்நீக்க நிலையத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
கல்பேனித் தீவில்குறைவெப்ப வெப்பஞ்சார்உவர்நீக்க நிலையம்
குஜராத்தில் ஜக்காவ் மற்றும் பிபாவாவ்-இல் தரவுத் தளம் மற்றும் லிடார் நிறுவப்பட்ட இடங்களின் காட்சி, உட்படங்களுடன்
கரையோரப் பாதுகாப்புத் திட்டங்களின் செயல்விளக்கம் - புதுச்சேரி கடற்கரை உருவாக்கமும் பொதுமக்களின் பங்கேற்பும்