பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகள்
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் புமி அமைப்பு அறிவியல் அறிவியல் நிறுவனத்தின் பெருங்கடல் கண்காணிப்புப் பிணையத் திட்டத்தின்படி, பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புக் குழுமத்திடம் நிலை நங்கூர மிதவை திட்டத்தின் செயல்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புக் குழு, 1996-ஆம் ஆண்டு தேசிய தரவு மிதவை திட்டம் எனப்பெயரிடப்பட்டு நிறுவப்பட்டது, இந்திய கடற்பகுதியில் நிலைநங்கூடமிட்டக் கண்காணிப்பு மிதவை பிணையத்தோடு தொடர்புடைய தொலைத்தொடர்பு வசதிகளை செயல்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும். பின்னர், பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகள் வட இந்தியப் பெருங்கடலில் பல முக்கிய நன்கு நிறுவப்பட்ட கண்காணிப்புத் திட்டங்களுக்கு முதன்மைப் பொறுப்பைப் பெற்றன. தொலைதூரப் பரந்து விரிந்த பெருங்கடல்களைத் தொடர்ந்து கவனிப்பது ஒரு சவாலாக இருந்தது, இது கள மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான அவதானிப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டது.
நிலை நங்கூரமிட்ட மிதவைகள், கண்காணிப்பு அமைப்புகளின் திறன்களை புரட்சிகரமாக்கி உலகளாவிய அமைப்பை சாத்தியமாக்கியுள்ளது. இன்று, செயற்கைக்கோள் அடிப்படையிலான அவதானிப்புகளுக்கு ஒரு நிரப்பியாக, களக்கண்காணிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. எண்ணியல் மாதிரிகளைத் தன்னியலாக்கும்போது, களக் கண்காணிப்பு அவதானிப்புகள் மாதிரியை அளவீடு செய்து ஒரு சுட்டுப் புள்ளியாக செயல்படுகின்றன. தற்போது, பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகள் கடல்சார், கடல் வானிலை மற்றும் சுனாமி எச்சரிக்கைப் பயன்பாடுகளுக்கு ஒரு நிலையான நிலைநங்கூரமிட்ட மிதவை வலையமைப்பை நிறுவியுள்ளன. நிலைநங்கூரமிட்டத் தரவு மிதவைகள் என்பவை கடலில் மிதக்கும் தளங்கள் ஆகும். அவற்றில் வானிலை மற்றும் கடல்சார் உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் களக் கடல் தரவைக் கண்காணிக்கக் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு பெறப்பட்டத் தரவுகள் பின்னர் செயற்கைக்கோள் மற்றும் இருப்பிடக் குறிப்பு மூலம், சென்னை, தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள சமநேர வானிலை, அதிநவீன பெருங்கடல் நிகழ்நேர தகவல் பார்வை மற்றும் ஆவணக்காப்பகங்களுக்கான மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பெருங்கடல் நிகழ்நேரத் தகவல் பார்வை மற்றும் ஆவணக்காப்பகங்களுக்கான மையம் உலகளாவிய மூன்றடுக்கு தரவு மைய தரநிலைகள் மற்றும் அளவிடுதல், பாதுகாப்பு, சுத்தமான மற்றும் மிகவும் பாதுகாப்பான சூழலுக்கான ஒருங்கிணைந்த வடிவமைப்புகளுக்கு இணங்குகிறது.
ஆம்னி (வட இந்தியப் பெருங்கடலில் நிலைநங்கூர மிதவைகள்) எனப்படும் அடுத்தத் தலைமுறை மிதவை அமைப்புகளில் கடல் நீரோட்டங்கள், கடத்துத்திறன், 500 மீ ஆழம் வரை வெப்பநிலை, சூரியக் கதிர்வீச்சு, மழைப்பொழிவு மற்றும் நிகழ்நேரத்தில் தரவுகளை அளவிட உயர் தொழில்நுட்ப உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இயற்கை பேரழிவுகளின் வடிவத்தில் சவால்கள் எழும்போது, சுனாமி முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புக்கு நீர் மட்டம் உயர்வைப் பற்றி எச்சரிக்கும் திறன் கொண்ட மிதவைகளை மடிப்பவிழ்ப்புச் செய்ய பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பில் உள்ள குழுவினர் இந்திய கடலில் சுனாமி மிதவை அமைப்பு மற்றும் கடலடி அழுத்தப் பதிப்பிகளை உருவாக்கி, சோதனை செய்து நிறுவியுள்ளனர்.
அத்துடன், பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளிப் பயன்பாடுகள் மையத்துடன் இணைந்து செயற்கைக்கோள் தரவுச் சரிபார்ப்புக்காக கேல்வேல் மிதவை அமைப்பை நிறுவி பராமரித்து வருகின்றன. போர்ட் பிளேயர், அகட்டி மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் கடலோர மிதவைகள் நிறுவப்பட்டு, இன்சாட் மற்றும் பொதுச் சிறு பொதி அலைச் சேவை தொடர்பு அமைப்புகளைப் பயன்படுத்தி வேலை செய்கின்றன. தரவு தொகுப்புகள் நிறுவனத்திலேயே பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
மேலும், 2014 முதல் வடதுருவ நிலைநங்கூர அமைப்பை நிறுவுவது தொடர்பாக வடதுருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்துடன் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு இணைந்துள்ளது. ரோபோ கடலோர கண்காணிப்பாளர், ரோபோமீன், நீரில் மூழ்கிய சுனாமி மிதவை அமைப்பு, ஒருங்கிணைந்த கடல் கண்காணிப்பு அமைப்பு போன்ற தன்னாட்சி கடல் கண்காணிப்பு கருவிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. மேலும் இவை உள்நாட்டிலேயே உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இதுபோன்ற பல அலகுகள் மற்றும் துணை கூறுகள் கடலில் வெற்றிகரமாக வேலை செய்கின்றன. கடற்பரப்பின் கீழுள்ள உணரிகள் கொண்ட இந்திய நிலைநங்கூரமிட்ட ஆம்னி மிதவை அமைப்பு உருவாக்கப்பட்டு கடலில் சோதிக்கப்பட்டு வருகிறது. பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகளின் மிக முக்கியமான அம்சம், குறிப்பாக தீவிர வானிலை நிலவரங்களில், தரவை நிகழ்நேரத்தில் பரப்புதல் ஆகும். கடற்கரை நிலையம் 24 x 7 என்ற அடிப்படையில் இயங்குகிறது, மேலும் சூறாவளிகள் மற்றும் சுனாமி போன்ற முக்கியமான தரவுகளைப் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்திற்குக் கொண்டுசெல்லும் முக்கியக் கணுப்புள்ளியாகச் செயல்படுகிறது.
நிலைநங்கூரமிட்ட மிதவை வலையமைப்பைக்கொண்டு நீண்ட கால தொடர் கண்காணிப்பு, மேற்கடற்பரப்பு இயக்கவியல் மற்றும் பருவமழை மாறுபாட்டை நன்கு புரிந்துகொள்ளவும், வானிலை மற்றும் தீவிர நிகழ்வுகளை நன்கு கணிக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலைநங்கூர மிதவை கண்காணிப்புகள் காற்று-கடல் இவற்றுக்கான தொடர்புகளில் பல புதிய நுட்பநோக்குகளைக் கொண்டு வந்துள்ளன, புயல்களுக்கு தனிப்பட்ட பதில்கள் மற்றும் தொலைதூர கடல்சார் பள்ளத்தாக்குகளுடன் தொலைத்தொடர்பு பற்றிய செய்திகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் வெளியிடப்பட்டன. நங்கூரமிடப்பட்ட தரவு மிதவைகளிலிருந்து பெறப்பட்ட விரைவான தரவுப் பரிமாற்றம், புயல்கள் ஏற்படும்போது மீஉயர்அதிர்வெண் நிகழ்நேர தரவு பரிமாற்றத்தை செயல்படுத்தியவிதம் தேசிய மற்றும் உலகளாவிய அறிவியற் சமூகத்தின் வரவேற்பைப் பெற்றது.
சவாலான கடல் சூழல் மற்றும் வடதுருவக் கடற்பனி பிராந்தியத்தில் இந்தியக் கடற்பரப்பில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த நங்கூரமிட்ட மிதவை பிணையத் தொழில்நுட்பத்தின் உள்நாட்டுமயமாக்கல் புகழையும் பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்துள்ளது. அவை 2014 ஆம் ஆண்டில் தேசிய புவி அறிவியல் விருது, 2017 இல் எம்டிஎஸ் லாக்ஹீட் மார்டின் விருது, 2018 இல் புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய உயராய்வு விருது, 2017 இல் யுனெஸ்கோ, அரசாங்கங்களுக்கிடையேயான கடல்சார் ஆணையம், உலக வானிலை ஆராய்ச்சிக் கழகம் இவற்றின் கையொப்பத்துடன் கூடிய கடலியல் மற்றும் கடல் வானிலைக்கான கூட்டு தொழில்நுட்ப ஆணையத்தின் சிறப்பு அங்கீகாரம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். நிலைநங்கூர மிதவைத் திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு பங்களிப்பதன் மூலம் சமூக சேவை மற்றும் திறன் மேம்பாட்டை வலியுறுத்தி நாட்டுக்கு சேவை செய்யும் தன் பயணத்தைத் தொடர்கிறது.
மேலும், கடல்சார் கண்காணிப்பு அமைப்புத் திட்டம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஆப்பிரிக்க-ஆசிய-ஆஸ்திரேலிய பருவமழைப் பகுப்பாய்வு மற்றும் கணிப்பு நிறுவனத்தின் அணிஅணியான நிலைநங்கூர ஆய்வு மிதவைகளைச் செயல்படுத்த உதவுகிறது. இந்த மிதவை அணியின் தரவு பருவமழையைப் பாதிக்கும் காரணிகள், இந்தியப் பெருங்கடல் இருமுனை மற்றும் மேடன்-ஜூலியன் ஊசலாட்டம் தொடர்பான மாறுபாட்டில் கடலின் பங்கைப் புரிந்துகொள்ளவும், வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் பிராந்தியத்தில் பிற உயர் அதிர்வெண் வானிலை நிகழ்வுகளை அறியவும் உதவுகிறது. இது செயல்பாட்டுக் காலநிலை முன்னறிவிப்பு மாதிரிகள், வானிலை மற்றும் காலநிலைக் கணிப்பு, கடல் தரவு ஒருங்கிணைப்பு வழிமுறைகள், கடல்-நிலை மதிப்பீடு, மறு பகுப்பாய்வு மற்றும் செயற்கைக்கோள் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு உதவும்.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியா மற்றும் அமெரிக்க சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கான புவி கூர்நோக்கு மற்றும் அறிவியல் மாநாட்டின் போது மற்றும் சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கான அறிவியல், இந்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் சர்வதேசக் கடற்பரப்பில் வட இந்தியப் பெருங்கடல் நிலைநங்கூர மிதவைப் பிணையத்தின் புதிய திறந்த தரவுக் கொள்கையை அறிவித்தார். சர்வதேச நீரில் மிதக்கிறது. இது தொடர்பாக, தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம், பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் மற்றும் பசிபிக் கடலியல் சூழல் ஆய்வகம்- தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆகியோரால் ஒரு கூட்டுச் தரவு இணைய வலைவாசல் உருவாக்கப்பட்டது, இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தேபெதொக-ஆம்னி மிதவைகள் மற்றும் நோஆ ராமா மிதவைத் தரவுகளைக் கொண்டுள்ளது. ராமா மற்றும் ஆம்னி கூட்டாண்மைக்கான ஒரு முக்கிய அடித்தளம் பிரத்யேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே உள்ள நிலைநங்கூர மிதவைகளில் இருந்து பெறப்படும் அனைத்து மீத்தரவுகளும் இலவச, திறந்த, சரியான நேரத்தில் மற்றும் தடையற்ற அணுகல் கொள்கையின் அடிப்படையில் உள்ள தரவுக் கொள்கையாகும்.
திட்டத்தின் நோக்கங்கள்
சிறந்த பயிற்சி முறை யுனெஸ்கோவின் சர்வதேச கடல்சார் ஆய்வு ஆணையத்தின் (IOC) "சர்வதேச கடல்சார் தரவு மற்றும் தகவல் பரிமாற்றம்" (IODE) மூலம் அங்கீகரிக்கப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் தரநிலைப்படுத்தலுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் உலகளாவிய தொலைத்தொடர்பு அமைப்புகள் (GTS) மூலம் உலகளாவிய சமூகத்திற்கு மிதவை தரவு பரப்பப்படுகிறது.
குறிப்பு: (http://www.iode.org/index.php?option=com_oe&task=viewDocumentRecord&docID=7573)
வட இந்தியப் பெருங்கடலில் பிளாஸ்டிக் (மேக்ரோ மற்றும் மைக்ரோ) இருப்பதை ஆய்வு செய்வதற்காக, கடல் குப்பை மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்கின் கீழ் வட இந்தியப் பெருங்கடலில் கடல் பிளாஸ்டிக்கின் மதிப்பீடு குறித்த திட்டமானது, தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து புவி அறிவியல் அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டது. கூடுதலாக, இந்தோ ஜப்பான் கூட்டு முயற்சியின் கீழ் JAMSTEC ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் நடைமுறையைப் பின்பற்றி ஒரு சிறந்த பயிற்சி முறை உருவாக்கப்பட்டுள்ளது. மேக்ரோ மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்குகளை சேகரித்து தனிமைப்படுத்த பல்வேறு மாதிரி கியர்கள் மேற்பரப்பு, நடுநீர் நெடுவரிசை மற்றும் கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பு: (ஆவணங்கள்))
Briefing for Ocean Best Practices System-UN Decade of Ocean Science for Sustainable Development meetings held at National Institute of Ocean Technology, Ministry of Earth Sciences, India on 10th January 2020.(ஆவணத்தைக் காண்க)