பெருங்கடல் மின்னணுவியல்
பெருங்கடல் மின்னணுவியல் குழு புதிய கடல் கண்காணிப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த குழுவானது சுயவிவர மிதவைகள், இன்சாட் தகவல்தொடர்புடன் கூடிய நகரும் மிதவை, சி-விவரக்குறிப்பு அமைப்பு, கம்பியில்லா விரிவாக்கக்கூடிய ஆழ்கடல் வெப்பப்பதிவி, கடத்துத்திறன், வெப்பநிலை மற்றும் ஆழ சுயவிவர அமைப்பு, பெருங்கடல் மிதவை வானூர்தி, பெருங்கடல் வெப்ப ஆற்றல் மற்றும் மீன் கூண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தற்சார்பு விவரக்குறிப்பு அமைப்புகள், மற்றும் மீன் கூண்டுத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மேம்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது.
இக்குழுவின் முக்கிய திட்டங்கள் பின்வருமாறு: கடலடிமட்ட அழுத்தப் பதிவு கருவியைப் பயன்படுத்தி சுனாமி எச்சரிப்பு அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்குதல் மற்றும் குறைந்த செலவில் உலோக மிதவையை உருவாக்குதல் போன்றவை இதில் அடங்கும்.
கடலடிப்படுகைத் தன்னியக்க விவரக்குறிப்பு நகரும் இயந்திரம்
கடலடிப்படுகைத் தன்னியக்க விவரக்குறிப்பு நகரும் இயந்திரங்கள் பெருங்கடல்களில் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை போன்ற விவரங்களை அளவிடப் பயன்படுகிறது. கடலடிப்படுகைத் தன்னியக்க விவரக்குறிப்பு நகரும் இயந்திரங்கள் 2000மீ வரை விவரக்குறிப்புக்காகவும், ஆழ்கடல் தன்னியக்க விவரக்குறிப்பு அமைப்பியந்திரம் 5000மீ வரையிலும் செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]() |
![]() |
![]() |
![]() |
2000மீ மற்றும் 5000மீ கடலடித் தன்னியக்க விவரக்குறிப்பு நகரும் இயந்திரங்களின் அமைப்பு
இன்சாட் தகவல் தொடர்புடன் கூடிய மிதவையின் உள்நாட்டுமயமாக்கல்
கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், உப்புத்தன்மை போன்ற வானிலை / கடல்சார் தகவல்களை சேகரிக்க கடலில் பயன்படுத்தப்படும் மிதக்கும் சாதனமான இன்சாட் தகவல்தொடர்புகளுடன் (பிரத்யு) நகரும் மிதவை உள்ளது. இன்சாட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி கடற்கரை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட தரவு புவிக்கோள இருப்பறி அமைப்புநிலையுடன் நேரமும் பதிவிடப்படுகிறது. பெருங்கடல் நீரோட்ட அளவீடு புவிக்கோள இருப்பறி நிலைத் தரவுகளிலிருந்து பெறப்படுகிறது.
![]() |
![]() |
புவிக்கோள நகரும் மிதவை அமைப்புத் திட்டத்தைத் தயாரித்து வழங்க 4 இந்திய நிறுவனங்களுக்குத் தொழில்நுட்பம் மாற்றப்பட்டது
2011-2015 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு நகரும் மிதவைக் கலப்பு அடுக்கின் தற்போதைய தடவழிகள்
தெற்கு வங்காள விரிகுடாவில் 89°கி மற்றும் 3. 8°வ பாகையில் சோதனை முயற்சியாக நிலைநிறுத்தப்பட்ட நகரும் மிதவை அமைப்பு (DB33-சிவப்பு), DB34-நீலம் மற்றும் DB35-பச்சை நிறத்தில் சுட்டப்பட்ட 2020 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 -ஆம் நாளன்றுள்ள கலப்பு அடுக்கு நீரோட்டத் தடவழிகள். கருப்பு நிறத் தடங்கள் புவிக்கோள நகரும் மிதவை திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்ட நகரும் மிதவைகளைக் குறிக்கின்றன இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் புவிக்கோள நகரும் மிதவை திட்டத்தின்கீழுள்ள மிதவைகளின் (உலக வானிலை ஆராய்ச்சி கழகத்தின் அடையாளக்குறியீட்டு எண்கள் 2301627, 2301628 மற்றும் 2301629).
"சி" கணக்கீட்டு அளவிஅமைப்பின் வளர்ச்சி மற்றும் உருவாக்கம்
சி- கணக்கீட்டு அளவி அமைப்புஎன்பது கப்பல் நகர்ந்து செல்லும்போது, பெருங்கடல் கலப்பு அடுக்கில்தொடர்ச்சியான செங்குத்து தரவு சுயவிவரங்களை சேகரிப்பதற்காக இயங்கும் தானியங்கி அமைப்பு ஆகும். சி-விவரக்குறிப்பு அமைப்பு ஒரு மின் இழுவை, இழுவை மீன் பொறி, கடத்துத்திறன், வெப்பநிலை, ஆழ உணரி, புவிக்கோள இருப்பறி அமைப்புத்தொகுதி மற்றும் ஒரு கட்டுப்படுத்தியைப் பயன்படுத்துகிறது. இழுவை மீன் பொறியில் கடத்துத்திறன், வெப்பநிலை, ஆழத்தைக் கண்டறியும் உணரி உள்ளது. ஒவ்வொரு கணக்கீட்டு அளவி அமைப்பிற்கும் மறுகட்டமைக்கக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஆழத்தை அடைவதற்கு, இழுவை மீன் பொறியை இயக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருளைக் கொண்ட கணினியைப் பயன்படுத்தி மின்னிழுவைக் கட்டுப்படுத்தப்படுகிறது. மென்பொருள் கடல் அளவுருக்களின் நிகழ்நேர அடுக்குகளை உருவாக்குகிறது, ஒரு கணக்கீட்டு அளவி மற்றும் செங்குத்து கோணத்தை அடைய கப்பல் கடக்கும் தொலைவைக் கணக்கிடுகிறது. கப்பலின் தரநிலை கடத்துத்திறன், வெப்பநிலை, ஆழத்தைக் தொடர்பு வரைபடங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்ட போது ஒரு நெருக்கமான பொருத்தம் கண்டறியப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் மற்றும் வழக்கமான கடத்துத்திறன், வெப்பநிலை, ஆழவிவரக்குறிப்புகளை விட சி-கணக்கீட்டு அளவியின் நன்மைகள் பின்வருமாறு:
![]() |
![]() |
"சி" கணக்கீட்டு அளவியைவங்கக் கடலில் சோதித்தல் |
கடல் அவதானிப்புகளுக்காக ஆளில்லா வான்கலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
ஆழமற்ற நீரினை பரிசோதித்தல் நீரின் தரக் கண்காணிப்பு நோக்கங்களைப் புரிந்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை ஆழமான நீரின் மாசுபாடு, சூழல் அமைப்பின் இடம்பெயர்வு மற்றும் கடலோர நீரில் கடல் வாழ்விடங்களுக்கான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. ஆழமான நீரிலிருந்து அலைகள் ஆழமற்ற நீர் மண்டலத்திற்குள் நுழையும் அதிக ஆற்றல் வாய்ந்த ஓடிக்கொண்டே இருக்கும் ஆழமற்ற நீரைக் கண்காணிப்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது. கடலோரப் பகுதிகளின் அளவீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கப்பல் அடிப்படையிலான தரவு சேகரிப்பு, கடலோர நிலைநங்கூர மிதவை, மனித அடிப்படையிலான நீர் மாதிரி முறை, தன்னியக்க நீரடி வாகனம் மற்றும் தன்னியக்க மேற்பரப்பு வாகனம் போன்ற பல நீர் தர அளவீட்டு அமைப்புகள் காணப்படுகின்றன. பெருங்கடல் மின்னணுவியல் குழுமம் ஆளில்லா பறக்கும் ஊர்தி அடிப்படையிலான உயர் தெளிவுத்திரைத்திறன் கொண்ட நீர்த் தரக்கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. ஆளில்லா பறக்கும் ஊர்தி அளவீட்டுக்கருவி ஏற்புச்சுமையின் தாங்கியாக உள்ளது, இது கடல்களின் வெப்பநிலை அளவீட்டு விவரம், ஆழமற்ற நீர்பரப்பின் ஆழம், கடத்துத்திறன், பிஎச் மதிப்பு, கரைந்துள்ள உயிர்வளி, கலங்கற்றன்மை, குளோரோபில்-ஒரு செறிவு மற்றும் பகுதியளவு கரியமில வளிமம் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கான உயர்-பிரிதிறன் உணரிகளின் வரிசையுடன் அமைந்துள்ளது.
கடல் கண்காணிப்புப் பயன்பாடுகளுக்கு ஆளில்லா ஊர்தியை (ஆளில்லா வான்வழி ஊர்தி) மாற்றியமைப்பதன் ஒரு பகுதியாக, பெருங்கடல் மின்னணுவியல் குழுமம், கடத்துத்திறன் வெப்பநிலை மற்றும் ஆழத்தைக் கணக்கிடும் அமைப்பின் உணரி மற்றும் 10 கிலோ ஏற்புத்திறன் கொண்ட ஆளில்லா வான்வழி ஊர்தியைப் பயன்படுத்தி ஊர்தியின் நிலைத்தன்மை (நிலையான & மாறும்) பற்றிய கள ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இந்தக் கள ஆய்வு, கடல் கண்காணிப்புப் பயன்பாடுகளுக்கு ஆளில்லா ஊர்தியை (ஆளில்லா வான்வழி ஊர்தி) மாற்றியமைப்பதில் பொருத்தத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
ஆளில்லா வான்வழி ஊர்தியின் செயல்திறன் மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவை கருவி ஏற்புச்சுமை மற்றும் அளவீட்டுத் திட்டங்களுக்கு மிகச் சிறந்ததாகக் காணப்படுகின்றன. மேலும் கள ஆய்வு மற்றும் கடல்சார் தரவு சேகரிப்புகள் ஆழமற்ற நீர் பகுதிகளுக்கான நீர் தரக் கண்காணிப்பு பயன்பாடுகளுக்கு பொருத்தமான ஆளில்லா வான்வழிஊர்தி தே. பெ. தொ. கழகத்தால் கொள்முதல் செய்யப்படும்.
பெருங்கடல் கடலடிச் சறுக்கு விமான உருவாக்கம்
பொறியில்லாக் கடலடிச் சறுக்கு விமானம் போன்ற பெருங்கடல் சறுக்கு விமானங்கள் நீண்ட தூரம் பயணிக்க மிகக் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, அவற்றை ஆய்வு மற்றும் அறிவியல் அளவீட்டுக்கானப் பணிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தலாம். இது தன்னியக்க நீர்மூழ்கி மற்றும் தொலை இயக்கு நீரடி வாகனம் போன்றவற்றைக்காட்டிலும், நீண்ட கால கடல்சார் பணிகளைச் செய்வதற்கு கடலடிச் சறுக்கு வாகனங்கள் முன்னணியில் இருக்கிறது. மிதப்பு மற்றும் புவிஈர்ப்பு மையம் ஆகியவை கடலடிச் சறுக்கு வாகனம் ஆழ்தல் மற்றும் திருப்புதல் போன்றவற்றைச் மேற்கொள்ள உதவுகிறது.
கடலடிச் சறுக்கு வாகனங்கள் என்பது சமீபத்தில் உருவாக்கப்பட்ட தன்னியக்க நீரடி வாகனத்தின்வகையைச் சேர்ந்தது, மிதப்பு மாற்றங்களால் இயக்கப்பட்டு, கடலில் அரம்பப்பல் பாதையில் பயணிக்கிறது. கடலடிச் சறுக்கு வாகனங்கள் மிக விரைவில் மிக்க அயர்வுத்திறன் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் தன்னியக்க நீர்மூழ்கிகளாக மாறிவிட்டன. அவைகளால் கடலின் உட்புறத்தை ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் மாதிரிக்கூறு செய்ய முடிகிறது, ஏனெனில் அவைகளால் உலகளாவிய தொலையிக்கியின் கீழ் ஓராண்டு காலத்திற்குக்தாய்க்கப்பலைப் பிரிந்து சுயாதீனமாக இயங்க முடியும், அவை இயல்பருகு நேர அவதானிப்புகளைப் அனுப்புகின்றன. மின்னணு வழிமுறைகளால் உடனடியாக அளவிடப்படும் கடல்சார் பண்புகளின் தீவிர, வழக்கமான மற்றும் நீடித்த அவதானிப்புகளுக்கு அவை மிகவும் பொருத்தமானவை. அவற்றின் நீண்ட தூரப்பயணம் மற்றும் அயர்வுத்திறன் மெதுவாக பயணிப்பதில் வருகிறது, இது கடல் வழியாக செல்லும் அவற்றின் திறனைப் பாதிக்கிறது.
சென்னையிலுள்ள தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் ஒரு புரட்சிகர புதிய நகரும் உணரி கணுவுடன் ஒரு நீரடி கடலடிச் சறுக்கு வாகனமான, "ஸ்லோகம் ஜி2 கிளைடர்" ("பாரதி", டெலிடைன் வெப் ரிசர்ச், அமெரிக்கா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது) என்ற கடலடிச் சறுக்கு வாகனத்தைக் கொண்டு2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வங்காள விரிகுடாவில்உயரிய இடஞ்சார்ந்த-தற்காலிகபகுதிறன் அளவீட்டை அறிமுகப்படுத்தியது. தே. பெ. தொ. க., 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வங்காள விரிகுடாவில் சுமார் நான்கு மாதங்கள் நீண்ட கால செயல்பாட்டையும் நடத்தியது.
ஆழ்கடல் என்பது சுரங்கம், எண்ணெய் ஆய்வு மற்றும் பிற தொழில்துறை நடவடிக்கைகளுக்கான புதிய எல்லையாகும், ஏனெனில் அவை கடல் பரப்பிற்கு கீழே பல மைல்களுக்கு அடியில் கண்டத் திட்டுக்களை விட்டு தனியே நிற்கின்றன. இவற்றோடு சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இதைத் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியமாகிறது. ஆழ்கடல் மேலடுக்கின் உயரிய இடஞ்சார்ந்த-தற்காலிககண்காணிப்பை வழங்க, தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் ஆழமான நீர் பயன்பாடுகளுக்கான கடலடிச் சறுக்கு வாகனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
திறந்த கடல் மீன் கூண்டு தொழில்நுட்பங்களின் மேம்பாடு
மானுடத் தேவைக்காக உலக உணவுக் கூடைக்கு இந்திய மீன்களின் பங்களிப்பு கணிசமானது. இந்தியா, உலகில் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி மற்றும் இரண்டாவது பெரிய மீன் வளர்ப்பு நாடாகும். இந்தியாவில் சுமார் 8118 கி. மீ., கடலோரக் கரையும் கிட்டத்தட்ட 2 மில்லியன் சதுர கி. மீ பிரத்யேகப் பொருளாதார மண்டலங்களும்ஐந்து இலட்ச சதுர கி. மீ., கண்டத்திட்டுப் பகுதியும் உள்ளன. இந்தக் கடல் வளங்களிலிருந்து, இந்தியா 4. 41 மில்லியன் டன் மீன்வளத்தை உற்பத்தி செய்கிறது. இதே போல், நம்மிடம் 3. 15 மில்லியன் ஹெக்டேர் பரப்புள்ள நீர்த்தேக்கங்கள், 2. 5 மில்லியன் ஹெக்டேர் பரப்புள்ள குளங்கள் மற்றும் தொட்டிகள், 1. 25 மில்லியன் ஹெக்டேர் பரப்புள்ள உவர் நீர் பகுதிகள், மலைப்பாங்கான மாநிலங்களின் குளிர்ந்த நீர் ஆதாரங்கள் மற்றும் பிற அனைத்து உள்நாட்டு மீன்வள ஆதாரங்களும் சுமார் 15 மில்லியன் டன் மீன் உற்பத்தித் திறனை வழங்குகின்றன. தற்போது இதன் வாயிலாக, இந்தியாவில் மீன் உற்பத்தி 13. 4 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 32% கடல்சார் துறையிலிருந்து வருகிறது, 2022-23 ஆம் ஆண்டிற்குள் 20 மெட்ரிக் டன் மீன் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட மிஷன் மாரிகல்ச்சர் -2022 "நீலப் புரட்சியை" உருவாக்கும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா(பிஎம்எம்எஸ்ஒய்) திட்டமிட்டுள்ளது.
நீலப் புரட்சி, அதன் பல்பரிமாண செயல்பாடுகளுடன், முக்கியமாக மீன்வள உற்பத்தி, மீன்வளர்ப்பு மற்றும் மீன்பண்ணைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. மோசமான வானிலையின் போது தற்போதைய திறந்தக் கடலில் மிதக்கும் கூண்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து, நீல தொலைநோக்கின்கீழ் கடல் மீன் வளர்ப்பை ஆதரிக்கக்கூடிய திறந்தக் கடலில் மூழ்கும் திடமான மீன் கூண்டுகள் அமைப்பு மற்றும் அதன் தீவன அமைப்புப் பகுதியில் பல்வேறு மீன் கூண்டுத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த மீன் கூண்டுத் தொழில்நுட்பங்கள் இந்திய சமூகங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
நோக்கங்கள்
பெருங்கடல் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி தற்சார்பு அளக்கை அமைப்புகள்.
மிதவைத்தன்மையை மாற்றியமைப்பதன் இயங்கும் தன்னியக்க நீரடி வாகனங்கள் (புவிச்சுழற்சிசார் பெருங்கடலியலுக்கான நிகழ்நேர வரிசை மிதவைகள்/ கடலடிச் சறுக்கு வாகனம் போன்றவை), ஒப்பீட்டளவில் அதிக அயர்வுத்திறனைக் கொண்டிருப்பதால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் தேவை அதிகரித்து வருகிறது. ஒரு மிதவை மிதப்புத்திறன் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. எண்ணெய்த் தேக்கத்திற்கும் வெளிப்புற நீர்ப்பைக்கும் இடையில் எண்ணெயை மாற்றுவதன் மூலம் மிதப்பு மாறுபடும். இம்மிதவைகள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஆழத்திற்குச் சுதந்திரமாகச் செல்கின்றன, பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் கடற்பரப்பிற்கு ஏறிவரும்போது, கடலை அளந்து, ஒரு செயற்கைக்கோளுக்கு தரவுகளை அனுப்பிவிட்டு, அடுத்தப் பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஆழத்திற்குத் திரும்பும். தன்னியக்க நீரடி வாகனத்தின் ஆயுட்காலம் அது எடுத்துச் செல்லக்கூடிய மின்கலத்திறனால் வரையறுக்கப்படுகிறது. ஒரு வழக்கமான நீரடி வாகனத்தின் சராசரி ஆயுட்காலம் தோராயமாக 150 சுழற்சிகள்: 10-நாள் மூழ்கும் சுழற்சியில், சராசரி மிதவை சுமார் 3. 7 ஆண்டுகள் நீடிக்கும்.
தற்போதைய ஆய்வில், கடல் செங்குத்து வெப்பச் சாய்வு விகித ஆற்றலைப் பயன்படுத்தி மிதவை/நீரடி வாகனங்களின் வாழ்க்கைச் சுழற்சியை மேம்படுத்த நாங்கள் முனைகிறோம். சூடான கடல் மேற்பரப்புக்கும் (~25oC) சுமார் 1000 மீ ஆழத்திற்கும் இடையே சுமார் 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேறுபாடு உள்ளது என்பது நன்கு உணரப்பட்டுள்ளது. ஒரு மிதவை, இறங்கி ஏறும் போது, வெப்பநிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி மிதப்புத் திறனை மாற்றலாம்.
முக்கியமாக உள்ளார்ந்த குறைந்த ஆற்றல் மாற்றுத்திறன் காரணமாக, பெருங்கடல் வெப்ப ஆற்றல் இன்னும் விரிவாக ஆராயப்படவில்லை. உண்மையில், 1 முதல் 20oC வரையிலான வெப்பநிலை மாறுபாட்டிற்கு, கோட்பாட்டு வரம்பு கார்னோட் சுழற்சியால் வழங்கப்படுகிறது - இது நடைமுறை வெப்ப-இயந்திர மற்றும் வெப்ப-மின் செயல்முறைகளின் செயல்திறனை விட அதிகமாக உள்ளது - இது 6. 5% மட்டுமே.
இருப்பினும், சிறிய அளவிலான, கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தினால், கடல் வெப்ப ஆற்றல் உணரிகள் மற்றும் சுற்றுச்சூழலின் வெப்பநிலை வேறுபாட்டிற்குள் நீண்ட கால பணிகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட ஆளில்லா வாகனங்களுக்கு சக்தி அளிக்க முடியும். இப்பணியில், அளவிடக்கூடிய மற்றும் திறமையான கடல் வெப்ப ஆற்றல் அறுவடை எந்திரத்தை உருவாக்க திட/திரவ நிலைமாற்ற பொருட்களின் (PCM) பயன்பாட்டை நாங்கள் ஆராய்வோம்.