பெருங்கடல் ஒலியியல்


தே. பெ. தொ. க., கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெருங்கடல் ஒலியியல் துறையில் சிறப்பறிவுத் திறத்தை உருவாக்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் கடல் பயன்பாடுகளுக்கான ஒலி அமைப்புகளின் உருவாக்கம் , இந்திய ஆழ்கடல் மற்றும் கடலோர நீர் மற்றும் துருவப் பகுதிகளில் சூழல் இரைச்சல் அளவீடுகள் மற்றும் நீருக்கடியில் ஒலி மூல பரவல் மற்றும் செயல் நெறி பயன்பாடுகளுக்கான நீரடியிலுள்ள ஒலி அமைப்புகள் போன்றவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பெருங்கடல் சுற்றுப்புறச்சூழல் இரைச்சல் தன்மை மற்றும் இரைச்சலின் மாதிரியாக்கம் குறித்த விரிவான தரவுப் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒலி திசையன் உணரிகளோடு அணிவரிசை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு கடலோர கண்காணிப்புப் பயன்பாடுகளை நோக்கி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவானது பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற ஒலியியல் சோதனை அமைப்பை நிறுவி நீருக்கடியில் ஒலி ஆற்றல் மாற்றிகளைச் சோதனை செய்து அளவொப்புமையைப் பராமரிக்கிறது.

தற்போது குழு முன்னிருத்தும் ஆய்வுகள்

  • துருவப் பகுதி தன்னாட்சி சூழல் ஒலி அளவீட்டு அமைப்பு மற்றும் வடதுருவத்தில் நெடுங்கால அளவீடுகள்
  • பெருங்கடல் மற்றும் செயல்நெறிசார் பயன்பாடுகளுக்கான நீண்ட கால ஆழ்கடல் இரைச்சல் அளவீடுகள்
  • கண்காணிப்புப் பயன்பாடுகளை நோக்கிய ஒரு தன்னியக்க அமைப்பாக ஒலி திசையன் உணரி வரிசையை மேம்படுத்துதல் மற்றும்
  • ஒலியியல் சோதனை அமைப்பை மேம்படுத்தி மற்றும் பராமரித்தல்.

துருவப் பகுதி மற்றும் வடதுருவ அளவீடுகளுக்கான சுற்றுப்புற இரைச்சல் அளவீட்டு அமைப்பு

பனி இயக்கவியல், உயிரிய ஒலியியல், வானிலையியல் மற்றும் பிற மானுடசூழலின் இரைச்சல், நீண்ட கால அளவீடுகள் போன்றவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்காக, துருவப் பகுதியில் ஒரு தன்னியக்கச்சுற்றுப்புற இரைச்சல் அளவீட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. துருவப் பகுதிக்கான முதல் தன்னியக்கச் சுற்றுப்புற ஒலி அளவீட்டு அமைப்பு தே. பெ. தொ. கழகத்தின் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் துருவ, பெருங்கடல் ஆராய்ச்சி தேசிய மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் வடதுருவத்திலுள்ள காங்ஸ்ஃப்ஜோர்டன் ஸ்வால்பார்ட் பகுதியில் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இண்ட்ஆர்க் நிலைநங்கூர அமைப்புடன் இணைத்து வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. பெருங்கடல் கண்காணிப்பு அமைப்புகள். இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது மட்டு மல்லாம்ல இதன் நான்கு ஆண்டுத் தரவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. 2018 -ஆம் ஆண்டில் ஒரு சுற்றுப்புற இரைச்சல் அளவீட்டு அமைப்புடன்கூடிய தனித்தியங்கும் நிலைநங்கூர அமைப்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

image
வடதுருவத்தில் சுற்றுப்புற இரைச்சல் அமைப்பை நிறுவுதல்

2015 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பெறப்பட்ட தரவுகள் தரம் சரிபார்க்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு விளக்கப்பட்டது. காங்ஸ்ஃப்ஜோர்டன் பகுதியின் ஒலிக்காட்சி பகுப்பாய்வு செய்யப்பட்டு, திறந்த நீர் மற்றும் பனி மூடிய நிலையில் இரைச்சல் அளவுகளில் உள்ள மாறுபாடு ஆராயப்பட்டது. குளிர்காலத்தில் பனி உருகுவது கண்டறியப்பட்டதுமல்லாமல் காரணிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. நேச்சர்-சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் உட்பட உயர் மதிப்பீடு பெற்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆழமான நீரில் சுற்றுப்புற ஒலி அளவீட்டு அமைப்பு (DANMS) மற்றும் ஆழமான நீரில் அளவீடுகளின் மேம்பாடு.

இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆழ்கடல் பகுதியின் சூழல் இரைச்சல் தரவுகளின் நேரத் தொடரைப் பதிவு செய்வதே இதன் நோக்கமாகும், குறிப்பாக கடல்சார் ஒலியியல் மற்றும் செயல் நெறிப் பயன்பாடுகளுக்காக ஆழமான நீரில் இரைச்சல் மாறுபாடு மற்றும் இரைச்சல் புலவலிமைப் பற்றிய அறிவைப் பெறுவதாகும். பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு ஆம்னி மிதவையின் ஒரு பகுதியாக அரேபிய கடலில் ஒரு ஆழ்கடலில் செயல்படும் நீர் அமைப்பு கருவி செயல்படுத்தப்பட்டு அதன் ஒரு ஆண்டுத் தரவு பெறப்பட்டது. அத்துடன், ஆழமான நீரில் சுற்றுப்புற ஒலி அளவீட்டு அமைப்பு உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

image
அரேபியக் கடலிலில் ஆழ்கடல் சுற்றுப்புற ஒலி அளவீட்டு அமைப்பைப் நிறுவுதல்

கடலோரக் கண்காணிப்புப் பயன்பாடுகளை நோக்கிய திசையன் உணரி வரிசையை மேம்படுத்துதல்

ஒரு திசையன் உணரி ஒலித்துகளின் வேகத்தையும் ஒலி அழுத்தத்தையும் அளவிடுகிறது, அதன் வரம்பு மற்றும் வருகையின் திசையை தீர்மானிப்பதன் மூலம் நீருக்கடியில் ஒலி மூலத்தைக் கண்டறியலாம். ஒரு முடுக்கமானி மற்றும் ஒலி அழுத்த உணரியைக் கொண்ட ஒரு திசையன் உணரி உருவாக்கப்பட்டுள்ளதோடு மூன்று-உறுப்பு திசையன் உணரி வரிசை திறந்த கடலின் ஆழமற்ற நீரில், கண்காணிப்புப் பயன்பாடுகளை நோக்கி நீருக்கடியில்ஒலி மூலத்தைக் கணடறியவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முடுக்கமானி மற்றும் ஒலி அழுத்த திசையன் உணரி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் மூன்று-உறுப்பு திசையன் உணரி கடலின் ஆழமற்ற நீரில், கண்காணிப்பு பயன்பாடுகளுக்காக நீருக்கடியில் ஒலியின் மூலத்தைக் கண்றிவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு இடுக்கி ஏரியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மேலும், இவ்வமைப்பு சென்னைக்கருகாமையிலுள ஆழமற்ற கடல் பகுதியில் நிறுவப்பட்டு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது. வருகையின் திசைக்கான வழிமுறை கணிப்பு உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, கள அளவீடுகளுடன் ஒப்பிடப்பட்டது.

image
திசையன் உணரி வரிசையை சோதித்தல்

ஒலியியல் சோதனை அமைப்பை மேம்படுத்திப் பராமரித்தல்

ஒலியியல் சோதனை அமைப்பு, 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு தே. பெ. தொ. க., ஆராய்ச்சி & மேம்பாட்டு நோக்கங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நீரடி ஒலி அளவீடுகள், நீருக்கடியில் மின் ஒலி மின்மாற்றி அளவுத்திருத்தம் மற்றும் 100Hz முதல் 500kHz வரையிலான சோதனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 2005-ஆம் ஆண்டு முதல் ஒலியியல் சோதனை அமைப்பு "சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால்" அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், நீரடி ஒலியியலில் ஒலியியல் சோதனை அமைப்பை தேசிய அளவில் நியமிக்கப்பட்ட ஆய்வகமாக மாற்றுவதற்காகவும், ரஷ்யா மற்றும் ஜெர்மனியில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வகங்களுடன் ‘ஆய்வகங்களுக்கு இடையேயான ஒப்பீட்டு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வகங்களுக்கு இடையேயான ஒப்பீட்டு முடிவுகள் தே. பெ. தொ. கழகத்தில் உள்ள நீரொலிமானி அளவுத்திருத்தம் சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துப்போவதுடன் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஆய்வகங்களுக்கு இணையாக உள்ளது என்பதை நிறுவியது. மேலும் 2018 ஆம் ஆண்டில், இங்கிலாந்திலுள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட நீரொலிமானி அளவுத்திருத்தத்தின் முக்கிய ஒப்பீட்டில், அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், கொரியா, துருக்கி மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகளுடன் ஒலியியல் சோதனை அமைப்பு வெற்றிகரமாகப் பங்கேற்றது.

image