கடல் உணரி அமைப்புகள்


கடல்சார் பயன்பாடுகளுக்கான ஆற்றல்மாற்றிகளையும் உருவரைவு அமைப்புகளை உருவாக்குதல்

நீல கோளாகிய நமது பூமி, 71% பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ளது, அதிலுள்ள 95% பகுதிகள் இன்னும் ஆராயப்படவில்லை. பெருங்கடலைப் பற்றிய நமது அறிவு உண்மையில் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைவாகவே உள்ளது. கடல்சார் ஆராய்ச்சி மற்றும் தேடல்களை மேம்படுத்துவதற்கான கருவியாக உணரித் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. தே. பெ. தொ. கழகத்தில் கடல்சார் உணரி அமைப்பு குழு 2005 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குடிமைசார் கடல் பயன்பாடுகளுக்கான ஆற்றல் மாற்றிகளையும் உருவரைவு அமைப்புகளையும் உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்டது. நீரடிப் பயன்பாடுகளுக்கான ஒலியியல் ஆற்றல் மாற்றிகளையும் நீரடிப் பயன்பாடுகளுக்கான அமைப்புகளையும் உருவாக்கி நிரூபிக்கும் தே. பெ. தொ. கழகத்தின் ஆணையை இக்குழு மேற்கொள்கிறது. ஆரம்ப காலத்தில், இக்குழுவின் கவனம் ஒலியியல் ஆற்றல்மாற்றிகளை உள்நாட்டிலேயே உருவாக்குவதாக இருந்தது. இக்குழுவானது அகலக்கற்றை ஒலியலைப் பரப்பிகளையும் சிற்றளவாக்கம் செய்யப்பட்ட உயர் உணர்திறனுள்ள நீரொலிமானி வரிசைகளையும் பல்வேறு அதிர்வெண் வரம்புகளில் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. தற்போது, இக்குழுவானது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படும் நீரடி ஒலி உருவரைவுத் திட்டத்தில் தம் கவனத்தைச் செலுத்துகிறது. நீரடிப் பயன்பாடுகளுக்கான ஆற்றல் மாற்றிகளையும் அமைப்புகளையும் வடிவமைக்கும் திறன் குழுவிற்கு உள்ளதால் குழுவின் செயல்பாடுகள் பொதுத்துறை நிறுவனங்களை ஈர்த்து வருகின்றன. ஹீலியம் வாயு கசிவைக் கண்டறியும் கருவி, சூழல் சோதனை அமைப்புகள், அரிமானக் கலன், அதிர்ச்சி மற்றும் அதிர்வுச் சோதனை அறை போன்ற வசதிகளுடன் தே. பெ. தொ. கழகத்தின் தனித்துவமான தேவைகளையும் குழு பூர்த்தி செய்கிறது. இக்குழுவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை. இக்குழுவின் திட்டங்கள் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது" என்ற பிரச்சாரத்திற்கு மிகவும் பொருத்தமானவை.


iamg

 

இக்குழுவால் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

உருவரைவு அமைப்புத் திட்டம்:

 • நீரடிப் பயன்பாடுகளுக்கான ஒலி ஆற்றல் மாற்றிகள் மற்றும் நீரொலிமானிகளின் உருவாக்கம்.
 • நீரடிப் பயன்பாடுகளுக்கான உணரிகளின் உருவாக்கம்.
 • ஒலியலையுணரிப் பயன்பாடுகளுக்கான இழுவைத் தளத்தின் உருவாக்கம்.
 • உயர்தர உருவரைவிற்கான நீரடி ஒலிக்குறிகைச் செயல்முறைகணிப்பு நெறிகளை உருவாக்குதல் (நீரடி உருவரைவு அமைப்புகளின் உருவாக்கம்).
 • அதிநவீன செயற்கைத் துளை ஒலியலையுணரி அமைப்புகளின் உருவாக்கம்.
 • புதையுண்டப் பொருட்களைக் கண்டறியும் தனித்த ஒலியலையுணரி உருவாக்கம்
 • புதையுண்டப் பொருட்களைக் கண்டறியும் ஒலியலையுணரியில் செயற்கை துளை நுட்பங்களை இணைத்தல்
 • பக்க நோக்குச் செயற்கைத் துளை ஒலியலையுணரி உருவாக்கம்
 • முன்னோக்கிய ஒலியலையுணரி உருவாக்கம்
 • ஒலிப்புலன் ஒளிப்படக்கருவி உருவாக்கம்
 • ஒலியாற்றல் மாற்றிகளின் உருவாக்கம், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

img