கடல் உயிரித் தொழில்நுட்பம் தீவுகளுக்கான கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


பெருங்கடல் உயிர்களின் தொட்டிலாகக் கருதப்படுகிறது, அங்கு உயிரினங்கள் 3. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதுமல்லாமல் உயிர்களின் உறைவிடமாகவும் வளங்களின் மாபெரும் கருவூலமாகவும் மாறியது. பெருங்கடல்கள் காலாகாலமாக உணவு மற்றும் வளங்களை வழங்கியுள்ளன, மேலும் உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார பரிணாமத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், குறிப்பாக உயிரித் தொழில்நுட்பவியல் செய்த அசாத்தியமான பாய்ச்சல்கள், கடல் வளங்களை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு மேலும் உதவியுள்ளன. இந்தியாவில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது நிலையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுமல்லாமல் சமீபகாலமாக அதிக வேகத்தையும் பெற்றுள்ளது. தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் (தே. பெ. தொ. க. ) என்பது, மேம்பட்ட பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் கடல் வாழ் வளங்களைப் பயன்படுத்துவதற்கான நம்பகமான உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நாட்டின் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். தே. பெ. தொ. க-தின் கடல் உயிரித் தொழில்நுட்பக் குழுவின் ஆய்வு நோக்கம் நான்கு முக்கிய செயல்பாடுகளை நோக்கியுள்ளது. கடற் பாசி உயிரித் தொழில்நுட்பம், கடல் நுண்ணுயிர் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் திறந்த கடல் கூண்டு வளர்ப்பு போன்றவையாகும். அதன் நோக்கங்கள் பின்வருமாறு:

  • தனிமைப்படுத்தல், சாத்தியமான கடற் பாசி இனங்களை அடையாளம் காணுதல், திரள்வளர்ப்பின் மேம்பாடு, அறுவடை செய்தல், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் உயிர்வேதிப் பொருட்களின் உற்பத்திக்கான நீரகற்றல் மற்றும் பிரித்தெடுத்தல் நுட்பங்கள்.
  • தனிமைப்படுத்தல், ஆழ்கடல் நுண்ணுயிரிகள் வளர்ப்பு, பிரித்தெடுத்தல், சுத்திகரிப்பு மற்றும் தொழில்துறை, உயிரி மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகளுக்கான புதியத் துணை வளர்சிதைப் பொருட்கள்.
  • இந்தியக் கடல்களுக்கு ஏற்ற கடல் கூண்டுகளை வடிவமைத்தல், மேம்பாடு, சோதனை மற்றும் கடலோர மீனவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான வணிக முக்கியத்துவம் வாய்ந்த மீன்களின் திறந்த கடல் கூண்டு வளர்ப்பு பற்றிய செயல்விளக்கம்.
  • நில அடிப்படையிலான நிலைப்பு நீர்கம்பத்தொட்டி சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை நிறுவுதல்-நிலைப்பு நீர்கம்பத்தொட்டி நீர் சுத்திகரிப்பு அமைப்புகளின் சோதனை மற்றும் சரிபார்ப்புக்கான சோதனை வசதி.

இது தவிர, அந்தமானில் கடலோர நீரின் தரம் மற்றும் அந்தமான் நிர்வாகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதிலும் குழு ஈடுபட்டுள்ளது.