ஆழ்கடல் தொழில்நுட்பம்


ஆழ்கடல் வளங்கள்

ஆழ்கடலில் பல்உலோக முடிச்சுகள், கோபால்ட் நிறைந்த மாங்கனீசு மேலோடு மற்றும் நீர் வெப்ப வைப்பு போன்ற ஏராளமான கனிம வளங்கள் உள்ளன.எதிர்காலத்தில், இத்தகைய கனிம வளத்தை மனிதகுலத்தின் நலனுக்காகப் பயன்படுத்துவது கடல் சார்ந்த சுரங்க நடவடிக்கைகளின் கவனமாக இருக்கும்.கனிமப்படிவு முடிச்சுகளில் தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு போன்ற பொருளாதார மதிப்புமிக்க உலோகங்கள்காணப்படுகின்றன, அவை அதிகரிக்கும் தேவைகளுக்கேற்ப குறைந்து கொண்டே வரும் நில வளங்களுக்கு மாற்றான சாத்தியமான ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

கடல்சார் கனிமப் பகிர்வு

ஒதுக்கப்பட்ட பகுதி:

பல்உலோக முடிச்சுகளை 5000-6000 மீட்டர் ஆழத்தில் இருந்து சுரங்கமாக்கும் தொழில்நுட்பத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முன்னோடி முதலீட்டாளராககருதி இந்திய அரசிற்கு ஐ.நா.வின் சர்வதேச கடற்பரப்பு ஆணைய (ISA), ஆயத்த ஆணைக்குழு, 75,000 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பை ஒதுக்கியுள்ளது.

திட்டப் பின்புலம்

தக்கவைத்துள்ள இந்திய முன்னோடி பகுதியில் 380 மில்லியன் டன் கனிமப்படிவு முடிச்சுகள் உள்ளன. கடலடி உயர் அழுத்த சூழல் மற்றும் மிகவும் மென்மையான மண்இவற்றினூடே, இவ்வளங்களை சுரங்கப்படுத்துவதற்கான ஆழ்கடல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதுஒரு பெரிய சவாலாகும். தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஒரு சுரங்கக் கருத்துருவில் பணியாற்றுகிறது, அங்கு ஒரு ஊர்ந்து செல்லும் அடிப்படையிலான சுரங்க இயந்திரம் நெகிழ்வான தூக்கி அமைப்பின் மூலம் நேர்மறை இடப்பெயர்ச்சி இறைப்பியைப் பயன்படுத்தி தாய்க் கப்பலுக்கு கனிமப்படிவு முடிச்சுகளை சேகரித்து, நசுக்கி, வெளிக்கொணர்கிறது

இந்திய அரசின் மத்திய புவி அறிவியல் அமைச்சகம்(MoES) ஆழ்கடல் திட்டத்தின் கீழ் (DOM) தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப கழகத்தின் மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பம் குழுமத்திற்கு இணைந்து 5000-5500 மீட்டர் ஆழத்தில் இருந்து கனிமப்படிவு முடிச்சுகளைத் தோண்டுவதற்கான ஒருங்கிணைந்த சுரங்க அமைப்பை உருவாக்க ஆணையிட்டுள்ளது. இத்திட்டப் பணிகள்பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஆணை:

  • 6000 மீ ஆழத்தில் இருந்து மாங்கனீசு முடிச்சுகளை சேகரித்து உந்தி வெளிக்கொணரும் திறன் கொண்ட புதிய ஊர்ந்து செல்லும் அடிப்படையிலான சுரங்க இயந்திரத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு.
  • கடல் தளத்திலிருந்து தாய் கப்பலுக்கு தோண்டியக் கனிமப்படிவு முடிச்சுகளைக் கொண்டு செல்வதற்கான நெகிழ்வான ரைசர் அமைப்பை உருவாக்குதல்.

ஒருங்கிணைந்த சுரங்க அமைப்பின் வடிவம்

ஆழ்கடல் சுரங்கம் – மேம்பாட்டு வளர்ச்சிகள்:

5000 முதல் 6000 மீட்டர் ஆழத்தில் மென்மையான கடல் தளத்திலிருந்து மாங்கனீசு முடிச்சுகளை ஆழ்கடல் சுரங்கப்படுத்துவது ஒரு பெரிய தொழில்நுட்ப சவாலாகும். இந்த சிக்கலான தொழில்நுட்பத்தை படிப்படியாக இந்திய நாடு உருவாக்கி வருகிறது. மேம்பாட்டு செலவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடர்களைத் தவிர்க்க, ஆழமற்ற நீர்ப்பரப்பில் இயந்திரங்களை மேம்படுத்தி, அதைத் தொடர்ந்து ஆழ்கடலில் பயன்படுத்தும் இயந்திரங்களை உருவாக்கும் முன் முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுகின்றன

முதல் கட்டமாக, 500 மீட்டர் ஆழத்தில் இயங்கக்கூடிய நீருக்கடியில் இயங்கும் சுரங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. பல்வேறு ஆழ்கடல் சுரங்கங்கள் மற்றும் நெகிழ்வான ரைசர் அமைப்பு குறித்து ஒரு ஆரம்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுரங்க இயந்திரம் மென்மையான கடற்பரப்பில் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டு பல்சக்கர தட வார்களைக் கொண்டுள்ளது.நெகிழ்வான ரைசர் சுரங்க அமைப்பு நீருக்கடியில் 410 மீ ஆழத்தில் இந்திய கடலில் சரிபார்த்து உறுதி செய்யப்படுள்ளது. மேலும், கனிமப்படிவு முடிச்சுகளை எடுத்து சேகரிக்கும் சுரங்க இயந்திரம், நொறுக்கி அலகுடன் மேம்படுத்தப்பட்டு, மல்வான் கடற்கரையில் 510 மீ ஆழத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.



5000-6000 மீ ஆழத்தில் இருந்து கனிமப்படிவு முடிச்சுகளுக்கான ஒருங்கிணைந்த சுரங்க அமைப்பின் உகப்பாக்கம் மற்றும் வடிவமைப்பு கள கடற்பரப்பு பண்புகளின் அளவீடுகளைப் பொறுத்தது.6000 மீ ஆழத்தில் கள மண் சோதனைக்கருவி தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சோதனை சுரங்கத் தள (TBS), மத்திய இந்திய பெருங்கடல் படுகையில் 5462 மீ ஆழத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதுமன்றிஅளக்கை நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

உந்தி இறைத்தல் ஆய்வுகள்

நிலை வாரியாக செங்குத்து ரைசர் அமைப்பு மூலம் கனிம முடிச்சுகளை உந்திச் செல்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

உண்மையான நெகிழ்வான செங்குத்து ரைசர் அமைப்பில் துடிப்பான குழம்பு ஓட்ட நடத்தையை மதிப்பிடுவதற்காக, நொறுக்கப்பட்ட இயற்கை கனிம மாங்கனீசு முடிச்சுகளுடனும் மற்றும் கனிமமின்ற வெற்று ஓட்டகடல் சோதனைகள் டிசம்பர் 17 - ஜனவரி 18 முதல் கடல்சார் ஆய்வு கப்பல் சாகர் நிதியில் நடத்தப்பட்டன. சோதனை அடிப்படையில் குழம்பு உந்தி அமைப்புடன் இணைந்த நெகிழ்வான ரைசர் அலகு கப்பலிலிருந்து 400 மீ அதிகபட்ச ஆழத்தில் இறக்கி சோதிக்கப்பட்டது. இரட்டை-உந்து தண்டுடன் திருகு ஊட்டி,திடப்பொருள் குழம்பு உந்தி அலகுஅதனுடன் உள்ளடக்கியநொறுக்கப்பட்ட கனிம முடிச்சுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பெய்குழலுடன்அமைந்த திருகு ஊட்டி, நீரியல் சக்திஅமைப்பு, கட்டுப்பாடு மற்றும் சக்தி அமைப்பு கடலடி பயன்பாடுகளுக்கு ஏற்றது. ரைசரின் நெகிழ்வான குழாயில் (Φ100 மிமீ) அழுத்தத்தினால்ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பதிவு செய்ய முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் அழுத்த உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும்.கடலில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டவை:

  • நெகிழ்வான குழாய் செங்குத்து ரைசரில் சேர்ப்பதற்கான குழம்பு ஓட்டத்தின் பண்புருவும்விசையியக்கக் குழாயும் ஒன்றுக்கொன்று, குழாய் வளைந்து நெளிந்து இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
  • மேம்பட்ட குழாய் அமைப்பு மற்றும் தள இணைப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்தல்.
  • சோதனைத் தரவுகள், பகுப்பாய்வு மற்றும் எண்ணியல் பகுப்பாய்வைசரிபார்க்கவும் இந்த அமைப்பை 6000 மீ ஆழம் வரை இறக்கி அளவிடவும் பயன்படுத்தப்படும். .
  • துடிப்பான செயல்பாட்டின் போது மாறுபட்ட ஓட்ட விகிதங்களில் செங்குத்து ரைசர் அமைப்பில் நீர்மக்குழம்பின் ஓட்ட நடத்தை மற்றும் அதன் விளைவாக ஒன்று குவிவதையும் மதிப்பிடல்.
  • நெகிழ்வான குழாய் அமைப்புகள் தாக்கம் எவ்வகையில் அழுத்த ஏற்ற மாறுபாட்டைத் தணிக்கும்என்பதைக் கண்டறிதல்.
  • இடைநிறுத்தப்பட்ட ரைசர் அமைப்பையும் கடலடி தளத்தையும் தாங்கும் கப்பலின் தூக்குத் திறனின் விளைவை மதிப்பிடல்.
செங்குத்து ரைசர் மூலம் விசைக்குழாய் சோதனை

5270 மீ ஆழத்தில் பெயர்ச்சியியக்கசெயல் விளக்கம்

சுரங்க இயந்திரம் 5270 மீ ஆழத்தில் மத்திய இந்தியப் பெருங்கடல் படுகையில் (CIOB) பெயர்ச்சியிக்க மற்றும் திசையமைவு மாறுவீதசோதனைக்குட்படுத்தப்பட்டது.இச்சோதனைகளின் முதன்மை நோக்கம் யாதெனில் தீவிர சுற்றுப்புற நீர் அழுத்தம் மற்றும் மிகக் குறைந்த வெப்பநிலையான1 - 4 டிகிரி சி-யின் நடுவில், மென்மையான மண்ணில் கடற்பகுதி பெயர்ச்சியியக்கம்/இழுவை திறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் இயந்திர நகரும் பாகங்கள், நீரியக்க ஆற்றல் அலகு, மின் அமைப்புகள் மற்றும் அளவுக்கருவிகள், போன்றவற்றைச் சோதிப்பதாகும். இந்த இயந்திரம் 5270 மீ ஆழத்தில் கடல் படுக்கையில் 2.5 மணிநேர செயல்பாட்டுடன் 120 மீட்டருக்கும் அதிகமான ஒட்டுமொத்த தூரத்தை கடக்கும் அளவில் மிக விரிவாக இயக்கிச் சோதிக்கப்பட்டது. இச் சாதனை இவ்வளவு ஆழத்தில் செயல்படும் முதல் பிணைக்கப்பட்ட கடல் படுகை நகரும் இயந்திரமாக இதைப் பதிவு செய்கிறது.

மத்திய இந்திய பெருங்கடல் படுகையில் சுரங்க இயந்திரத்தை நிறுவுதல் (V1- 2021)

5270மீ ஆழக் கடற்பரப்பில் சுரங்க இயந்திரத்தின் பெயர்ச்சியியாக்கம்

செயல்பாட்டின் போது சுரங்க இயந்திரத்தையும் பார்வை தளத்தையும் மறுபடி மீட்டல்

முன்மொழியப்பட்ட வேலை:

மத்திய இந்திய பெருங்கடல் படுகையில் சுரங்க இயந்திரத்தின் பெயர்ச்சியியக்கக் கடல் சோதனைகள் முடிவுற்றதும், சுரங்க இயந்திரம் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இயந்திர பின்தொடரும் வண்டி மற்றும் சேகரிப்பானில் சேகரிக்கப்பட்ட கனிம முடிச்சுகளைக் கடற்பரப்பிலிருந்து உந்தி அமைப்பிற்கு கொண்டு செல்லும்படி விரிவாக்கம் செய்யப்படும். தொப்புள் கம்பிவடம் மூலம் கப்பலில் இருந்து தொங்கவிடப்பட்டுள்ளஉந்தி சட்டகத்திற்கு நொறுக்கப்பட்ட கனிம முடிச்சுகளை அனுப்ப இயந்திரத்தில் ஒரு நொறுக்கியோடுள்ள உந்தி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.திட்டமிடப்பட்ட சுரங்க இயந்திரம், பெயர்ச்சியியக்க அமைப்பைத் தவிர்த்து, இயந்திரத்தின் முன்னேறு முனையில் மண்கோரி வகை கனிம முடிச்சு சேகரிப்பு அமைப்பு, முடிச்சு நொறுக்கி, ஊட்டி மற்றும் குழம்பு உந்தி அமைப்பையும் கொண்டிருக்கும்.

ஆரம்பத்தில், உந்தி நிலையம் இல்லாமல் கடற் சோதனை நடத்த முன்மொழியப்பட்டது, அங்கு சேகரிக்கப்பட்ட கனிம முடிச்சுகள் கடல் மட்டத்திலிருந்து 50 மீ -80 மீ உயரத்தில் அருகிலேயே வெளியேற்றப்படும். கோவாவில் உள்ள தேசிய கடலியல் ஆய்வு நிறுவனத்துடன் (NIO) ஒருங்கிணைந்து இச்சோதனைகள் நடத்தப்படும், அந்நிறுவனம் கடற்படுகையில்நங்கூரமிட்டு அமைந்துள்ள கனிம முடிச்சு சேகரிப்பானால்ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கடலடித் தரவு மிதவைகளின் உதவியோடுமதிப்பிட்டு கண்காணிக்கும்..

150 - 200 மீ நீளமுள்ள நெகிழ்வான குழாய் மூலம் உந்தி இறைக்க முயற்சிக்கப்படும், கடற்படுகையிலிருந்து 50 - 80 மீட்டருக்கு மேலே குழம்பு வெளியேற்றப்படுகிறது.

கனிம முடிச்சு சேகரிப்பு மற்றும் உந்தி சோதனைகளுக்கான சுரங்க இயந்திரத்தின் அமைப்புப்படம்


நீர்மூழ்கிகள்

ஆழ்கடல் கனிம வளங்களான பாலி-மெட்டாலிக் மாங்கனீஸ் முடிச்சுகள், வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகள், நீர்மவெப்ப சல்பைடுகள் மற்றும் பிற கடல்சார், துருவ மற்றும் தொழில்துறை பயன்பாடுகளின் ஆய்வு மற்றும் சுரண்டலுக்காக ஆள் மற்றும் ஆளில்லா நீரடி வாகனங்களை உருவாக்கும் பணியில் ஆழ்கடல் தொழில்நுட்பம் குழுமம் ஈடுபட்டுள்ளது.


ஆள் மற்றும் ஆளில்லா நீரடி வாகனங்கள்:

  • 6000மீ ஆழம் வரை செல்லக்கூடியதும் மூன்று விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் உபகரணங்களை சுமக்கும் திறன் கொண்ட நீரடி வாகன வடிவமைப்பு மற்றும் மேம்பாடு.
  • 6000மீ ஆழ மதிப்பிடப்பட்ட பணி வகுப்பு நீரடி ஆளில்லா தொலைதூர இயக்கு வாகன (ROSUB 6000) மேம்பாடு மற்றும் அவ்வாகனைத்தை ஆழ்கடல் அறிவியல் ஆய்வுக்காக பயன்படுத்துதல்.
  • 500மீ ஆழ மதிப்பிடப்பட்ட துருவ மற்றும் ஆழமற்ற நீரில் தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகன (PROVe) மேம்பாடு மற்றும் ஆழமற்ற நீர் மற்றும் துருவ அறிவியல் ஆய்வுகளுக்காக பயன்படுத்துதல்.
  • ஆழ்கடல் கம்பிவட தன்னியக்க உள்ளகமாக்கல் அமைப்பை (WACS) மேம்படுத்தி 100மீ வரை துளையிடல், மாக்கடல் படுகைகளிலிருந்து வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகளின் உள்ளக மாதிரிகளை பெருமமாக 3000மீ ஆழம் வரை சேகரித்து அடிப்படை உண்மைகளைச் சரிபார்த்தல்.

ஆழமான நீரில் தொலைதூர இயக்கு வாகனங்கள் ROV - ROSUB 6000

தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் (தே.பெ.தொ.க) நிறுவனத்தின் வாயிலாக 6000மீ ஆழத்தில் மதிப்பிடப்பட்ட ஆழ்நீர் வகை தொலைதூர இயக்கு வாகனங்களின் (ROV) உருவாக்கம் இந்திய அரசின் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் பாலிமெட்டாலிக் கனிம முடிச்சுசுரங்க மேலாண்மை (PMN) வாரியத்தால் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை விஞ்ஞான அறிவியல் சார்ந்த பயன்பாட்டிற்கென நடத்தி முடிக்கப்பட்டன. தொலைதூர இயக்கு வாகனங்களில் உள்ள பல-செயல்பாட்டுக் கருவிகள், உணரிகள் வழியே கனிம ஆராய்ச்சி, கடற்படுகை உருவரைவு, நீர்ம திரவ எரிவாயு ஆய்வு, குழாய்த்தொடர் வழிப்படுத்தல், நீர்மூழ்கிக் கம்பிவடம், கிணற்று முகப்பைக் கண்டறிதல், மாதிரி கூறெடுத்தல் போன்ற கரையண்மைப் பரப்புப் பயன்பாட்டிற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீரடி ஆளில்லா தொலைதூர இயக்கு வாகன அமைப்பு(ROSUB)உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்க்கப்பட்ட நெடுநோக்குச் செயல்பாட்டிற்காக பாலிமெட்டாலிக் கனிம முடிச்சு சுரங்கத்தளத்தில்(PMN) 5289 மீ ஆழம் வரைசோதிக்கப்பட்டது.கிருஷ்ணா-கோதாவரி (KG) ஆற்றுப்பள்ளத்தாக்கிலுள்ளவாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகளுள்ள தளம், நீர்மவெப்ப ஆற்றல் சல்பைடுகள் தளம் – தென் மத்தியமுகடு பிராந்தியத்தில் உள்ள சோன்(SONNE) ஃபீல்ட், பாலிமெட்டாலிக் கனிமமுடிச்சு சுரங்கத்(பிஎம்என்) தளமானமத்திய இந்திய பெருங்கடல் படுகை ஆகியவற்றில் விஞ்ஞான ஆய்வுகள் 5289மீ ஆழம் வரை, தொலை இயக்கு ஆழ்கடல் நீரடி வாகனங்களைப் (ROSUB 6000) பயன்படுத்தி நடத்தப்பட்டன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காணாமல் போன இந்திய விமானப்படை AN32 விமானத்தின் சிதைவு பாகங்களின் இலக்குச் சரிபார்ப்பு 3400மீ ஆழத்தில் ROSUB 6000 அமைப்பின் ஒலிவீதிணி மற்றும் ஒளியியல் தோற்றமாக்கல் பயன்படுத்தப்பட்டது.


img
ROSUB 6000 அமைப்பு

இந்த ROSUB அமைப்பில் ஆழமான நீரில் பயன்படுத்தக்கூடிய தொலைதூர இயக்கு வாகனம் (ROV), கலப்பயணி இணைவடமேலாண்மை அமைப்பு (TMS), கப்பல் சார்ந்த செலுத்துதல் மற்றும் மீட்பு அமைப்பு (LARS), மின் பரிமாற்றம் மற்றும் தொலைதூரத் தரவு அமைப்பு, ஒருங்கிணைந்த வழிசெலுத்தல் அமைப்பு (INS) மற்றும் கட்டுப்பாடு மென்பொருள் போன்றவை உள்ளன. மூழ்கிய எடை சட்டகத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுரையால் செய்யப்பட்ட மிதவை பொதிகளால் ஈடு செய்யப்படுகிறது. இது ஐந்து-செயல்பாட்டு பறிப்பி கை போன்ற அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது, இதனால் ஒரு ஆதரவைப் பிடித்துக் கொண்டு தொலை இயக்கு வாகனத்தை (ROV)ஒரே நிலையில் சீராக நிலைநிறுத்த முடிகிறது, மேலும் ஏழு-செயல்பாடுகளைக் கையாளும் அமைப்பு ஒதுக்கப்பட்ட ரோபோடிக் பணிகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாளும் அமைப்பு பல்வேறு தொழில்துறைப் பயன்பாடுகளில் உள்ளதைப் போன்றது, பல இணைப்புகள், சுழலும் மணிக்கட்டு கை மற்றும் போன்ற விரல்களை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

img
ROSUB 6000 அமைப்புச் செயல்பாட்டின் காட்சி

ஆழமற்ற நீர்/ துருவ தொலை இயக்கு வாகனம் (PROVe)

6000மீ ஆழ மதிப்பிடப்பட்ட ஆளில்லா தொலை இயக்கு நீரடி வாகனத்தினால் (ROSUB 6000) பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், ஆழமற்ற நீர் மற்றும் துருவப் பகுதிகளில் அறிவியல் மற்றும் பொறியியல் பயன்பாடுகளின் தேவையை உள்நாட்டிலேயே வடிவமைத்துப் பூர்த்தி செய்வதற்காக ஆழமற்ற நீர்/ துருவ தொலை இயக்கு நீரடி வாகனத்தின் (PROVe) வடிவமைப்பு மற்றும் மேம்பாடு தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த வாகனம் 500மீ வரையுள்ள ஆழமற்ற நீரில் BLDC உந்துவிப்பான்களைப் பயன்படுத்தி மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுகிறது மேலும் இதை 4-டிஓஎஃப் (விடுதலைப்பாகை) யில் கையாள முடியும். இந்த வாகனத்தில் நீருக்கடியில் காணொளிப் படமெடுக்கும் கேமிராக்கள், விளக்குகள், அறிவியல் உணரிகள் (CTDO), நீரடி நிறமாலை கதிர்வீச்சு மானி, எதிரொலி ஒலிவீதிணி வருடி, வழிசெலுத்தல் உணரி மற்றும் பனிப்பாறை உள்ளகச்சுருட்டுத் தோண்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. துருவ தொலை இயக்கு நீரடி வாகனத்தின் மூலம் கடல்சார் ஆய்வு, துறைமுகம் மற்றும் கலத்துறைகளில் தேடல் மற்றும் மீட்பு, பல்லுயிர் பெருக்க உருப்படம், பவளப்பாறை கண்காணிப்பு, பனி தடிமன் அளவீடு, காட்சி ஆதரவு போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த துருவ தொலை இயக்கு நீரடி வாகனத்தின் மூலம் 200மீ ஆழம் வரை சென்று அந்தமான் தீவுகளில் பவளப்பாறை ஆய்வுகள் மற்றும் அரபிக்கடலில் பல்லுயிர் பெருக்க அறிவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 90மீ ஆழத்தில் வங்காள விரிகுடாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்ப நிறுவன (DRDO)நோக்கங்களுக்காக இந்த துருவ தொலை இயக்கு நீரடி வாகனத்தைப் பயன்படுத்தி நீருக்கடியில் உள்ள பொருட்களைப் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அண்டார்டிகாவின் மைத்ரி அடிப்படை நிலையத்தின் அருகிலுள்ள பிரியதர்ஷினி ஏரி மற்றும் 34 வது இந்திய அண்டார்டிக் கோடை பயணத்தின் போது இந்தியத்தடையரண் பனிப்படிவ அடுக்கு ஆகியவற்றில் 62 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியதென நிறுவப்பட்டதுமன்றி இந்த துருவ தொலை இயக்கு நீரடி வாகனம் துருவ அறிவியல் பயன்பாட்டிற்கெனச் சோதிக்கப்பட்டு தகுதி பெற்றது.

img
நீருக்கடியில் PROVe இன்படம்

ஆழமான நீரில் பணிக்குழுவுடன் செல்லும் நீர்மூழ்கி

ஆழ்கடல் தொழில்நுட்பம் குழுமம் 6000மீ ஆழம் வரைச் செல்லும் மதிப்பிடப்பட்ட ஆழ்நீரில் பணிக்குழுவுடன் மூழ்கக்கூடிய விஞ்ஞான ஆராய்ச்சி நீர்மூழ்கியின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. ஆழமான நீரில் விஞ்ஞானிகளுடன் செல்லும் நீர்மூழ்கி வாகனம், உயிரினங்கள் அதன் சுற்றுச்சூழல்களிலும் இயற்கையான வாழ்விடங்களிலும் வாழ்வதைக்காண அனுமதிக்கிறது. பணிக்குழுவுடன் செல்லும் நீர்மூழ்கி வாகனம் ஆழ்கடல் வள ஆய்வுகள், ஆழமான நீரில் அறிவியல் உய்த்துணர்வு, தேடல் மற்றும் இடர் மீட்பு ஆதரவு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு உதவும். 6000மீ ஆழத்தில் 12 மணிநேர செயல்பாட்டு அயற்வுத்திறனுடன் 3 நபர்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதும் 96 மணிநேரம் அவசர நெருக்கடி நிலையில் பணியாற்றக் கூடியதும் பணியாளர் கோளம்/மனிதபொதியுறை, உயிர்காப்பு அமைப்பு, நிலைப்படுத்தல் அமைப்புகள், உந்துதல் அமைப்புகள், நீருக்கடியில் மின்கலன், மின்விநியோக அமைப்பு, உணரிகள், கட்டுப்பாட்டு வன்பொருள் மற்றும் வழிசெலுத்தல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கென இறுதி செய்யப்பட்டது.

img
பணிக்குழுச் செல்லும் நீர்மூழ்கியின் கருத்தியல் வடிவமைப்பு

வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகளுக்கான தொழில்நுட்பம்

வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகள் என்பது இயற்கை எரிவாயு மற்றும் தண்ணீரின் படிககலவையாகும் (தொழில்நுட்பரீதியாக இதுக்ளாத்ரேட் என அழைக்கப்படுகிறது) இதுபார்வைக்குப் பனியைப்போல தோன்றுகிறது, ஆனால் அதைப்பற்ற வைத்தால் எரிகிறது. வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகளில் உள்ள ஆற்றல் அனைத்துப் புதைபடிவ எரி பொருட்களையும் விடஇரண்டுமடங்கு அதிகமாகும். வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டில் மிக அதிக அளவு மீத்தேன் உள்ளது, மேலும் இது ஒரு தெளிவான நீரகக்கரிமஎரிபொருள் ஆதாரமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட் உற்பத்தியின் சாத்தியமான ஆய்வு மற்றும் தேவையற்ற சுற்றுச்சூழல் விளைவுகளை கணிப்பதில் நமது இயற்பியல், வேதியியல், புவியியல் மற்றும் புவிதொழில்நுட்ப அறிவு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, "வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகள்" வரும் ஆண்டுகளில் அதிக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் என்பது உறுதி. இந்தியாவில் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழுள்ள NGHP யின் JOIDES துளையிடும் திட்டத்தின் போது வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகள் கிடைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது..

img        img
கரிமப் பகிர்வு

முக்கியச் செயல்பாடுகள் பின்வருமாறு:

  • ஆழ்கடல் ஆய்வு தொழில்நுட்பமேம்பாடு
  •       -> – ROSUB 6000-வை அறிவியல் தாங்குசுமைகளுடன் வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட் ஆய்வுக்காக பயன்படுத்துதல்
          -> – வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட் நிகழ்வின் தரை உண்மை சரிபார்ப்புக்காக தன்னியக்க உள்ளகச்சுருட்டுத் தோண்டுக் கருவிகள் அமைப்பின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
  • பிரித்தெடுக்கும் முறை/தொழில்நுட்பம் பற்றிய ஆய்வு நெறிமுறை நடவடிக்கைகள்
  •       -> – கணித/கோட்பாட்டுஆய்வுகள்
          -> – ஆய்வக அளவீட்டுச் சோதனைகள்
          -> – வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகளிலிருந்து மீத்தேனை பிரித்தெடுப்பதற்கான சோதனைகளை நடத்துவதற்கான தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு

வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகளின் ஆய்வை நோக்கி, மீத்தேன் எரிவாயு ஹைட்ரேட் ஆய்வுக்குத் தேவையான அறிவியல் தாங்கு சுமைகளுடன் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனம் ROV - ROSUB 6000 யை உருவாக்கியது. இந்த வாகனம் கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்பள்ளத்தாக்கிலுள்ள ஒரு எரிவாயு ஹைட்ரேட்தளத்தில் இறக்கப்பட்டது மன்றி வங்காள விரிகுடாவில் 1037மீ ஆழத்தில் செயற்கை வேதித் தொகுப்பு நுண்ணுயிரிவாழ்விடங்களின் நிகழ்வை நிறுவியது..

வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட் நிகழ்வின் தரை உண்மை சரிபார்ப்பை நோக்கி, அமெரிக்காவிலுள்ள வில்லியம்சன் & அசோசியேட்ஸூடன் இணைந்து ஒருகம்பிவடதன்னியக்க உள்ளகச்சுருட்டு அமைப்பு (WACS) உருவாக்கப்பட்டது. இந்தஅமைப்பு 100மீ வரைதுளையிடும் படிவடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் கடல்மட்டத்திலிருந்து பெருமமாக 3000மீ ஆழம் வரைகம்பிவடதுளையிடும் தொழில்நுட்பம் மூலம் உள்ளகமாதிரிகளைச் சேகரிக்கும் படிவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அழுத்த உள்ளகச் சேகரிப்பானுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கடற்படுகைக்களத்திலிருந்து நேரடியாக அழுத்தச்சூழ்நிலையில் வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்டுகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வங்காளவிரிகுடாவில் 2906மீ ஆழம் வரைசெயல்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அமைப்பு வங்காள விரிகுடாவில் உள்ள கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்பள்ளத்தாக்கில் வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்தளத்தில் 60 (கடல்தளத்திற்கு கீழேமீட்டர்) வரைபயன்படுத்தப்பட்டது. மேலும் 223மீ ஆழம் வரைசென்று 101.5 (கடல்தளத்திற்கு கீழே மீட்டர்)துளையிட்டு உள்ளக மாதிரிகளை சேகரித்துள்ளது.

WACS -ஐ இறக்குத் நீருக்கடியில்துரப்பணத்தலை
துரப்பண அமைப்பின் காட்சி நீருக்கடியில்துரப்பணக் காட்சி

பிரித்தெடுத்தல் சாத்தியக் கூறு ஆய்வுகள்

  • கிருஷ்ணா-கோதாவரி, மகாநதி மற்றும் அந்தமான் முகத்துவாப் பள்ளத்தாக்கு போன்ற வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்நீர்த் தேக்கங்களில் வெப்ப வைப்பு மற்றும் அழுத்தக்குறைப்பு அடிப்படையிலான நுட்பங்களைப் பயன்படுத்தி மீத்தேன் ஹைட்ரேட் பிரித்தெடுத்தலுக்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
  • அழுத்தக் குறைப்பு மற்றும் மின்-வெப்ப நுட்பங்களின் செயல்திறனை அடையாளம் காண MATLAB குறியீடு மற்றும் நீர்த்தேக்கமாதிரியாக்க மென்பொருள் TOUG + HYDRATE ஐப்பயன்படுத்தி உருவகப்படுத்துதல்கள் நிகழ்த்தப்பட்டன.
  • உருவாகும் பொறிமுறையைப் புரிந்துகொள்ள, கள வாயு சேர்மப்பொருள் ஹைட்ரேட்வெப்பகடத்துத்திறன் மற்றும் ஒலிப்பண்புகளை அளவிடும் பொருட்டு ஒரு ஆய்வகமும் நிறுவப்பட்டுள்ளது.